தொடர் மழை, மெட்ரோ ரயில் பணி, சாலை பள்ளங்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: மழை, மெட்ரோ பணி மற்​றும் சாலைப் பள்​ளம் காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மோந்தா புயல் காரண​மாக சென்னை மற்​றும் புறநகரில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. இதனால் பல்​வேறு சாலைகளின் இரு​புறங்​களி​லும் மழைநீர் தேங்​கியது. பல சாலைகள் குண்​டும் குழி​யு​மாக காட்​சி​யளிப்​ப​தால் அந்த பள்​ளங்​களி​லும் மழைநீர் தேங்​கியது.

இதனால் வாகன ஓட்​டிகள் சீரான வேகத்​தில் செல்ல முடி​யாமல் குறைந்த வேகத்​தில் சென்​றனர். எனவே பல்​வேறு சாலைகளில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. மேலும் மெட்ரோ மற்​றும் மேம்​பாலப் பணி​களால் சாலைகள் சுருங்​கி​விட்​டன. இதனால் அந்த வழி​யாக செல்​லும் வாக​னங்​கள் மெது​வாக ஊர்ந்து செல்​கின்​றன.

குறிப்​பாக அண்ணா சாலை​யில் இரும்பு மேம்​பாலப் பணி​கள் நடை​பெற்று வரும் பகு​தி​யில் தடுப்​பு​கள் ஏற்​படுத்​தப்​பட்டு போக்​கு​வரத்​தில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. அதே​போல் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பணி காரண​மாக கிண்டி முதல் பூந்​தமல்லி வரை சாலை​யின் இரு​புற​மும் இரும்​புத் தடுப்​பு​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்துகொண்டே
இருந்ததால் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. | படம்: எம்.முத்துகணேஷ் |

இதனால் இந்த பகு​தி​களில் பொது​வாகவே வாகன நெரிசல் இருக்​கும். தற்​போது பெய்து வரும் மழை காரண​மாக தேங்​கிய நீரால் கூடு​தலாக போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டுள்​ளது. நேற்று காலை கிழக்கு கடற்​கரைச் சாலை, திரு​வான்​மியூர், அடை​யாறு, பட்​டினப்​பாக்​கம் மற்​றும் மெரினா வரை போக்​கு​வரத்து நெரிசலை உணர முடிந்​தது.

இதே​போல் பூந்​தமல்லி நெடுஞ்​சாலை, மந்​தைவெளி, மயி​லாப்​பூர் பகு​தி​களி​லும் வாகன நெரிசல் காணப்​பட்​டது. தொடர்ந்து மழை பெய்து கொண்​டிருந்​தால் வட சென்​னை​யிலும் போக்​கு​வரத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டது. மழை காரண​மாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் ஒரு சில இடங்​களில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​ட​தாக​வும், மழை நின்​றவுடன் சிறிது நேரத்​தில் அனைத்​தும் சரி செய்​யப்​பட்​ட​தாக​வும்​ போலீஸ்​ தரப்​பில் தெரிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.