உ.பி.யின் முஸ்தபாபாத் நகரம் கபீர் தாம் என பெயர் மாறுகிறது

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்​பூர் கேரி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முதல்வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது:

நமது ஆட்​சி​யில் ஃபை​சா​பாத் நகரம் அயோத்தி என பெயர் மாற்​றப்​பட்​டது. அதே​போல் அலகா​பாத் நகரம் பிர​யாக்​ராஜ் என மாற்​றப்​பட்​டது. தற்​போது முஸ்​த​பா​பாத் நகரத்தை கபீர் தாம் என பெயர் மாற்​றம் செய்​யப் போகிறோம். மத்​தி​யிலும், மாநிலத்​தி​லும் உள்ள பாஜக தலை​மையி​லான அரசுகள், நமது நாட்​டில் உள்ள மிக​வும் அழகான, மத முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நகரங்​களை மீட்​டெடுத்து வரு​கின்றன. அதில் ஒரு பகு​தி​தான் இது.

நமது ஒற்​றுமை​யைக் குலைக்க, சில சக்​தி​கள் உரு​வாகி வரு​கின்​றன. அது​போன்​றவர்​களிடம் நாம் உஷா​ராக இருக்​கவேண்​டும். சாதி என்ற பெய​ரால் நம்​மிடையே பிரி​வினையை உரு​வாக்க முயலும் சக்​தி​களிடம் நாம் விழிப்​புடன் இருக்​கவேண்​டும்.

அனைத்​துப் பிரச்​சினை​களுக்கும் தேசப்​பற்​று​தான் தீர்​வாக இருக்க முடி​யும். இந்த இடம் சாதாரண பூமியல்ல. இது நமது தாய்​நாடு, தந்தை நாடு. நாட்​டுக்​காக சேவை செய்​வது உண்​மை​யாகவே கடவுளுக்கு செய்​யும் தொண்​டாகும். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.