புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக முகமது ஆதில் ஹுசைனி (59) என்பவரை டெல்லியின் சீமாபுரியில் போலீஸார் 2 தினங்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரைச் சேர்ந்த இவர் சையது ஆதில் ஹுசைன், நசிமுதீன் மற்றும் சையது ஆதில் ஹுசைனி ஆகிய பெயர்களிலும் இயங்கி வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டைச் சேர்ந்த அணு விஞ்ஞானியுடன் தொடர்பு வைத்திருந்த இவர், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 1 அசல், 2 போலி பாஸ்போர்ட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆதிலுக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ஆதிலின் சகோதரர் அக்தர் ஹுசைனியும் மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 3 பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவரும் வளைகுடா நாடுகளுக்கு அவ்வப்போது சென்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
