குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு

புனே: குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டிய இளைஞருக்கு 1,000 துண்​டுப் பிரசுரங்​களை வழங்​கு​மாறு புனே மோட்​டார் வாகன நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்​வாட்​டின் ஹின்​ஜா​வாடி பகு​தி​யில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28 வயது இளைஞர் ஒரு​வர் மது​போதை​யில் வாக​னம் ஓட்டி வந்து போலீ​ஸாரிடம் சிக்​கிக்​கொண்​டார்.

இதையடுத்து அவர் மீது மோட்​டார் வாகன சட்​டம் தொடர்​புடைய பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. அவருக்​கு, புனே மோட்​டார் வாகன நீதி​மன்​றம் ரூ.10,000 அபராதம் விதித்​தது.

அத்​துடன் குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டு​வ​தால் ஏற்​படும் ஆபத்​துகள் குறித்து 1,000 துண்​டுப் பிரசுரங்​களை அச்​சிட்டு போக்​கு​வரத்து சிக்​னல்​களில் வாகன ஓட்​டுநர்​களுக்கு விநியோகிக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​ட​தாக பிம்ப்ரி சின்ச்​வாட் போக்​கு​வரத்து பிரிவு காவல் துறை அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​துள்​ளார்.

நடப்​பாண்டு ஜனவரி முதல் செப்​டம்​பர் வரையி​லான ஒன்​பது மாதங்​களில் குடிபோதை​யில் வாக​னம் இயக்​கிய​தாக 2,984 வழக்​கு​களை பிம்ப்ரி சின்ச்​வாட் காவல் துறை​யினர் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.