மதுரை: எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம் என்று கூறியதுடன், அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என செய்தியாளர்களுடன் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி கூட்டாக தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இணைந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பழனிசாமிதான் எங்கள் எதிரி; துரோகத்தை […]