ஆர்ஜேடி ஆட்சியில் 40,000 பேர் கடத்தல்: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

முசாபர்பூர்: கடந்த கால ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) ஆட்​சிக் காலத்​தில் 40,000-க்​கும் மேற்​பட்​டோர் கடத்​தப்​பட்​டனர் என்று பிரதமர் நரேந்​திர மோடி குற்​றம் சாட்டினார்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி அந்த மாநிலத்தின் முசாபர்​பூர் மற்றும் சப்ராவில் நேற்று பாஜக பிரச்​சார கூட்​டங்கள் நடை​பெற்​றன. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது:

சத் பண்​டிகையை ஒட்டி பிஹார் பெண்​கள் விரதமிருந்து சத்தி மையாவை வழிபடு​கின்​றனர். ஆனால் ஆர்​ஜேடி, காங்​கிரஸ் தலை​வர்​கள், சத்தி மையாவை அவம​தித்து உள்​ளனர். அவர்​களை பிஹார் மக்​கள் ஒரு​போதும் மன்​னிக்க மாட்​டார்​கள். தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு பிஹாரின் பாரம்​பரி​யத்தை போற்றி பாது​காத்து வரு​கிறது. சத் பண்​டிகைக்கு யுனெஸ்கோ அங்​கீ​காரம் பெற அதிதீ​விர நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

பிஹார் தேர்​தலை​யொட்டி இரு ஊழல் இளவரசர்​கள் கைகோத்து உள்​ளனர். ஒரு​வர் (ராகுல் காந்​தி) நாட்​டின் மிகப்​பெரிய ஊழல் குடும்​பத்தை சேர்ந்தவர். மற்​றொரு​வர் (தேஜஸ்வி யாதவ்) பிஹாரின் மிகப்​பெரிய ஊழல் குடும்​பத்தை சேர்ந்​தவர். ஊழல் வழக்​கு​களில் சிக்​கி​யுள்ள இரு​வரும் ஜாமீனில் வெளியே நடமாடு​கின்​றனர்.

காங்​கிரஸும் ஆர்​ஜேடி​யும் ஒற்​றுமை​யாக இருப்​பது போன்று வெளிஅரங்​கில் நடிக்​கின்​றன. உள்​அரங்​கில் இரு கட்​சி​யினரும் மிகக் கடுமை​யாக மோதிக் கொள்​கின்​றனர்.

ஆர்​ஜேடி சார்​பில் அண்​மை​யில் வெளி​யிடப்​பட்ட தேர்​தல் அறிக்​கை, பொய்​களின் அறிக்கையாகும். கடத்​தல், கொள்​ளை, ஊழலுக்கு வித்​திடும் வகை​யில் ஆர்​ஜேடி-​யின் தேர்​தல் அறிக்கை அமைந்​திருக்​கிறது.

கடந்த கால ஆர்​ஜேடி ஆட்​சி​யில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெட்டு இருந்​தது. ஆர்​ஜேடி ஆட்​சி​யில் சுமார் 40,000-க்​கும் மேற்​பட்​டோர் கடத்​தப்​பட்​டனர். குறிப்​பாக பெண்​கள், குழந்​தைகள் அதிக அளவில் கடத்​தப்​பட்​டனர். கொள்ளை சம்​பவங்​கள் அதி​க​மாக நடை​பெற்​றன. ரயில்வே துறை​யின் சொத்​துகள் சூறை​யாடப்​பட்​டன.

ஆர்​ஜேடி, காங்​கிரஸ் தலை​வர்​கள், அம்​பேத்​கரை அவம​தித்​தனர். பட்​டியலின மக்​கள் மீது அவர்​களுக்கு துளி​யும் அக்​கறை கிடை​யாது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு அம்​பேத்​கருக்கு முதல் மரி​யாதை செலுத்தி வரு​கிறது. டிஜிட்​டல் பரிவர்த்​தனைக்​காக உரு​வாக்​கப்​பட்ட செயலிக்கு பீம் என்று பெயரிடப்​பட்​டது. பட்​டியலின மக்​களின் வளர்ச்​சிக்​காக தே.ஐ. கூட்​டணி அரசு அயராது பாடு​பட்டு வரு​கிறது.

பிஹார் மாநில பெண்​களின் முன்​னேற்​றத்​துக்​காக நானும் முதல்​வர் நிதிஷ் குமாரும் இரவு பகலாக உழைத்து வரு​கிறோம்.
சுயதொழில் தொடங்​கு​வதற்​காக 1.2 கோடி பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுதவி வழங்​கப்பட்​டது. தே.ஜ.கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைத்​தால் பெண்​களுக்​கான பல்​வேறு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும்.

திமுக மீது குற்​றச்​சாட்டு: கர்​நாட​கா, தெலங்​கா​னா​வில் காங்​கிரஸ் ஆட்சி நடை​பெறுகிறது. அங்கு பணி​யாற்​றும் பிஹார் மக்​களை காங்​கிரஸ்
தொடர்ந்து அவம​தித்து வரு​கி​றது. இதே​போல தமிழகத்​தில் பணி​யாற்​றும் பிஹார் மக்​களை திமுக தலை​வர்​கள் அவம​தித்து வரு​கின்​றனர்.

பிஹாரை​யும் பிஹார் மக்​களை​யும் அவம​தித்த தலை​வர்​களை, காங்​கிரஸ் கட்சி தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக அழைத்து வரு​கிறது. இதன்​மூலம் ஒட்​டுமொத்த பிஹாரை​யும் காங்​கிரஸ் அவம​தித்து வரு​கிறது. ஆர்​ஜேடி, காங்​கிரஸ் விரிக்​கும் வலை​யில் மக்​கள் சிக்க மாட்​டார்​கள். தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யில் பிஹார் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது. வரும் தேர்​தலில் எங்​கள் கூட்​டணி அமோக வெற்றி பெற்​று
பிஹாரில்​ மீண்​டும்​ ஆட்​சி அமைக்​கும்​. இவ்வாறு அவர் பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.