பாட்னா: பிஹார் சுயேச்சை எம்.பி. ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்தல் வியூகம் வகுக்க மாநிலத்துக்கு மாநிலம் ஓடியவர் பிரசாந்த் கிஷோர். அவர் பிஹார் வந்து முதல்வர் நிதிஷ் குமாரை வளர்ப்புத் தந்தை என்று அழைத்து இங்கேயே தங்குவதாக கூறினார். பிறகு ஜெகன்மோகன், மம்தாவிடம் ஓடினார்.
கன்சல்டன்சி சேவை மூலம் தனக்கு பணம் வருவதாக பிரசாந்த் கிஷோர் கூறுகிறார். ஆனால் அவர் கூறும் நிறுவனத்தின் நிதி அறிக்கையில் இவருக்கு வழங்கப்பட்ட தொகை பற்றிய விவரம் இல்லை. அப்படியெனில் இவருக்கு பணம் கொடுத்தது யார்? பிஹார் தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோர் ரூ.650 கோடி திரட்டியுள்ளார். இதன் மூலம் பிஹாரை கொள்ளையடித்துள்ளார். இவ்வாறு பப்பு யாதவ் கூறினார்.