பணம் சேர்க்கும் கலை: நீங்க இந்த விஷயங்களை எல்லாம் செய்யுறீங்களா?

சம்பளம் வந்த அடுத்த சில நாள்களிலேயே வங்கிக் கணக்கு காலியாகிவிடுகிறது. ‘அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம்’ என மனதைச் சமாதானம் செய்துகொண்டு, மாதக் கடைசியில் சிரமப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

வாடகை, கடன், வீட்டுச் செலவுகள் எனப் பணம் கரைந்துபோக, ‘சேமிப்பு’ என்பது நம்மில் பலருக்கும் கனவாகவே இருக்கிறது. ஆனால், பணம் சேர்ப்பதற்கும், அதை வளர்ப்பதற்கும் ஒரு கணக்கு வேண்டும்; தெளிவான திட்டம் வேண்டும். உங்களிடம் அது உள்ளதா? தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.

சேமிப்புக் கணக்கு: பணத்தைக் கரைக்கும் மாயை!

வங்கியில் பணத்தை வைத்தால் 3% வட்டி கிடைக்கும். ஆனால், நாட்டின் பணவீக்க விகிதம் (inflation) 5-6% ஆக இருக்கிறது. இதன் அர்த்தம், உங்கள் பணத்தின் வாங்கும் சக்தி ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே இருக்கிறது. உங்கள் ஒரு லட்சம் ரூபாய், அடுத்த வருடம் ₹95,000 மதிப்புக்குச் சமமாகிவிடும். அதாவது, உங்கள் பணம் வளர்வதற்குப் பதிலாகத் தேய்ந்துகொண்டிருக்கிறது.

ஃபிக்ஸட் டெபாசிட்: ஆமை வேக வளர்ச்சி போதுமா?

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் 6.30% முதல் 7.25% வரை இருக்கிறது. இதிலிருக்கும் சிக்கலைப் புரிந்துகொள்ள ஒரு கணக்கைப் பார்ப்போம்:

  • நீங்கள் முதலீடு செய்வது: ₹5,00,000 (7% வட்டியில்)

  • ஓராண்டு வட்டி: ₹35,000

  • TDS வரி (10%): ₹3,500 கழிக்கப்படும்

  • கையில் கிடைப்பது: ₹31,500

இந்த வட்டி உங்கள் மொத்த வருமானத்தோடு சேரும் என்பதால், நீங்கள் உங்கள் வருமான வரி வரம்புக்கு ஏற்பக் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆக, உண்மையான வளர்ச்சி என்பது 5.46% மட்டுமே. இதே வேகத்தில் சென்றால், 20 வருடங்கள் கழித்து உங்கள் ஐந்து லட்சம் ரூபாய், சுமார் பதின்மூன்று லட்சமாக உயர்ந்திருக்கும். ஆனால், 20 வருடங்கள் கழித்து உங்கள் பிள்ளையின் படிப்புக்கோ, திருமணத்துக்கோ அந்தத் தொகை போதுமானதாக இருக்குமா?

சிட் ஃபண்ட், தங்கம்: நம்பி ஏமாற வேண்டாம்!

சில சிட் ஃபண்ட் நிறுவனங்கள் “12% வட்டி” என ஆசை காட்டும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட சிட் ஃபண்ட் நிறுவனங்கள் மூடப்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்திருக்கிறார்கள். தங்கம் வாங்கும்போதும் 6%-18% செய்கூலி சேதாரம், விற்கும்போதும் 2% இழப்பு என லாபம் பார்ப்பது கடினம்.

வயது ஒரு தடையல்ல… தொடங்குவதே முக்கியம்!

30-களில் இருக்கிறீர்களா?
நீங்கள் மாதம் ₹8,000 முதலீடு செய்தால், 20 ஆண்டுகளில் அது ₹25 லட்சமாக வளரும். உங்கள் பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற பெரிய செலவுகளைச் சமாளிக்க இது உதவும்.

40-களில் இருக்கிறீர்களா?
வீட்டுக் கடன் முடிய இன்னும் 15-20 வருடங்கள் ஆகலாம். அதன்பின் ஓய்வுக்காலத்துக்காகச் சேமிக்க சில ஆண்டுகளே மீதம் இருக்கும். எனவே, இப்போதே திட்டமிடவில்லையென்றால், எதிர்காலம் கடினமாகிவிடும்.

50-களில் இருக்கிறீர்களா?
இனியாவது தொடங்குங்கள்! இன்னும் 10 வருடங்கள் வேலை இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் சேமிப்பை FD-யில் முடக்குவது, உங்கள் ஓய்வுக்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களே உங்களைக் காக்கும் கவசமாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்: ஸ்மார்ட்டான வழி!

FD-யில் ₹5,00,000 → 20 வருடம் → ₹13,50,000
மியூச்சுவல் ஃபண்டில் ₹5,00,000 → 20 வருடம் → ₹40,00,000

பாதுகாப்பு: உங்கள் பணம் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று சரிந்தாலும் மற்றவை உங்கள் முதலீட்டைக் காப்பாற்றும். ரிஸ்க் குறைவு, வருமானம் அதிகம்.

நிபுணர் சொல்வதைக் கேளுங்கள்!

பணத்தைச் செலவு செய்வதிலும் சேமிப்பதிலும் ஒரு தெளிவான திட்டமிடல் அவசியம். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து பட்ஜெட் போட்டு, மாதம் 20% முதலீட்டுக்கு ஒதுக்கினால், செல்வம் தானாகச் சேரும்.

நவம்பர் 5, புதன்கிழமை: உங்கள் நிதி எதிர்காலத்திற்கான நாள்!

மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம் வழங்கும் ‘செல்வம் சேர்க்க வேண்டுமா? சவால்களும் நடைமுறை தீர்வுகளும்’ எனும் இலவச வெபினாரில் கலந்துகொள்ள்ளுங்கள்.

நாள்: நவம்பர் 5, புதன்

நேரம்: மாலை 7:30 – 8:30
யாருக்கு: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதி மக்களுக்காக மட்டுமே!

75 பேருக்கு மட்டும் நடத்தப்படும் இந்தச் சிறப்பு வெபினாரில், 20 வருட அனுபவம் கொண்ட நிதி ஆலோசகர் குரு ராஜ், உங்களுக்கு வழிகாட்டுவார்.

உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். உங்கள் குடும்பத்தின் கனவுகளையும், செல்வம் சேர்க்கும் வழிகளையும் அறிய, இப்போதே தொடங்குங்கள். இந்த 60 நிமிடங்கள் உங்கள் நிதி வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கலாம்.

இப்போதே பதிவு செய்யுங்கள்!

இன்று தொடங்குவதுதான் நாளைய வளர்ச்சி. இந்தச் சிறப்பு வகுப்பு, உங்கள் நிதி முன்னேற்றத்துக்கான முதல் படி. 75 இடங்கள் மட்டுமே இருப்பதால், அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டாம்.

ரெஜிஸ்டர் செய்ய ‘இங்கே’ கிளிக் செய்யவும்.

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களை உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்ட ஆவணங்களை கவனமாக படித்து பார்க்கவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.