கொடிக் கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புதுடெல்லி: தமிழ்கத்தில் அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற தடைகோரி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழகத்தில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வைப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.ராஜா சார்​பில் வழக்​கறிஞர் ராம் சங்​கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் தாக்​கல் செய்​தார். அதில், தமிழகத்​தில் கட்​சிகளின் கொடிக் ​கம்​பங்​களை அகற்ற பிறப்​பித்த சென்னை உயர் நீதி​மன்ற கிளை உத்​தர​வுக்கு தடை விதிக்க கோரப்​பட்​டுள்​ளது.

இந்த மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு நேற்று விசா​ரித்​தது. இதே விவ​காரம் தொடர்​புடைய மனுவை இந்த அமர்வு ஏற்​கெனவே தள்​ளு​படி செய்​தது. இதனிடையே, மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த வேறு அமர்வு தமிழக அரசு உள்​ளிட்ட எதிர்​மனு​தாாரர்​களுக்கு பதில் அளிக்க உத்​தர​விட்​டு, கொடிக்​கம்​பங்​களை அகற்​றாமல் தற்​போதுள்ள நிலையே தொடர வேண்​டும் என உத்​தர​விட்​டது. இந்த மனுவை தலைமை நீதிப​தி​யிடம் அளித்து உரிய அமர்​வு​முன் பட்​டியலிட வேண்​டும் பதி​வாள​ருக்​கு உத்​தர​விட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.