3 மாநிலங்களில் தேடப்பட்ட பெண் மாவோயிஸ்ட் சரண்

பாலாகட்: ரூ.14 லட்​சம் பரிசு தொகை அறிவிக்​கப்​பட்​டிருந்த முக்​கிய பெண் மாவோ​யிஸ்ட் மத்​திய பிரதேசத்​தில் சரண் அடைந்​தார். மத்​திய பிரதேசம், சத்​தீஸ்​கர், மகா​ராஷ்டிர மாநிலங்​களில் பல்​வேறு வன்​முறை​களில் ஈடு​பட்டு வந்​தவர் சுனி​தா. தடை செய்​யப்​பட்ட மாவோ​யிஸ்ட் இயக்​கத்​தில் மத்​திய கமிட்டி உறுப்​பின​ராக​வும் இருந்​தார். இவர் மீது 3 மாநிலங்​களி​லும் பல்​வேறு வழக்​கு​கள் உள்​ளன. அத்​துடன், சுனிதா பற்றி தகவல் தெரி​விப்​பவர்​களுக்கு 3 மாநிலங்​களும் சேர்ந்து 14 லட்​சம் பரிசு வழங்​கப்​படும் என்று கூட்​டாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், ம.பி.​யின் பாலாகட் பகு​தி​யில் கடந்த 1-ம் தேதி சுனிதா சரணடைந்​தார். மாவோ​யிஸ்ட் ஒழிப்பு சிறப்​புப் படை உதவி கமாண்​டர் ரூபேந்​திர துருவ் முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து சுனிதா சரணடைந்​தார். இவர் சத்​தீஸ்​கர் மாநிலம் பிஜப்​பூர் தாலு​காவை சேர்ந்​தவர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் மாவோ​யிஸ்ட் இயக்​கத்​தில் தீவிர​மாக செயல்​பட்டு வந்​தவர்.

இதுகுறித்து ம.பி. முதல்​வர் மோகன் யாதவ் கூறும்​போது, ‘‘மாவோ​யிஸ்​ட்கள் சரணடைய வேண்​டும். இல்​லை​யென்​றால் முற்​றி​லும் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா எச்​சரித்​துள்​ளார். அதற்கு ஏற்​பட்ட பலனாக சுனிதா சரணடைந்​துள்​ளார்’’ என்று தெரிவித்தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.