Washington Sundar Csk Trade: 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 10 ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் இருந்து தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், வீரர்கள் டிரேடிங் (அணிமாற்ற) முறையிலும் அணியிலிருந்து அணி மாறும் செயல்பாடுகளும் நடந்து வருகின்றன.
Add Zee News as a Preferred Source
சிஎஸ்கே செல்கிறாரா வாஷிங்டன் சுந்தர்
அந்த வகையில் அதிகமாக பேசப்பட்ட டிரேடிங் செய்தியாக, குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடும் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்படுவார் என்ற வதந்தி பரவி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் மட்டுமில்லை, முன்னாள் வீரர்களிடையிலும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. அஸ்வின் ஓய்வை அறிவித்ததை அடுத்து, அவருக்கு பதிலாக சிஎஸ்கே வாஷிங்டன் சுந்தரை தங்களது அணியில் சேர்த்துக் கொள்வார்கள் என்ற செய்திகள் இணையத்தில் வைரலாகியிருந்தன. ஆனால் இதுவரை குஜராத் டைட்டன்ஸோ, சென்னை சூப்பர் கிங்ஸோ இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வழங்கவில்லை.
ஆகாஷ் சோப்ரா விளக்க்ம்
இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனல் வழியாக, “வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்ல மாட்டார் என எனக்கு தோன்றுகிறது” என கருத்து தெரிவித்துள்ளார். “சுந்தர் சில போட்டிகளில் வாய்ப்பு இல்லாததைப் பற்றி கூறியிருந்தாலும், குஜராத் அணியின் சூழலும் செட்டப்பும் அவருக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்தால், அவர் தற்போதைக்கு வேறொரு அணிக்குச் செல்ல விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் குஜராத் அணி அவரை முழுநேர பந்துவீச்சாளராக மட்டுமல்ல, திறமையான பேட்ஸ்மேனாகவும் நம்பிக்கை வைத்துள்ளது. இத்தகைய நிலையில் அந்த அணி அவரை வெளியேற்றாது என்பதில் எனக்கு உறுதி உள்ளது” எனச் ஆகாஷ் சோப்ரா கூறினார்.
தற்போது டிரேடிங் காலம் நெருங்கியுள்ள நிலையில், வாஷிங்டன் சுந்தர் உண்மையில் சிஎஸ்கே அணியில் இணைவாரா, அல்லது குஜராத் டைட்டன்ஸில் தொடர்வாரா என்பது ரசிகர்களிடையே ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
R Balaji