Why Ravichandran Ashwin Withdrew From Big Bash: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் விளையாடிய அஸ்வின், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. பல ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் வந்த அவருக்கு சூழல் ஏற்றதாக இல்லாததால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Add Zee News as a Preferred Source
Ravichandran Ashwin – பிக் பாஷில் இருந்து விலகிய அஸ்வின்
இதனைத் தொடர்ந்து அவர் சர்வதேச டி20 லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 லீக்கில் தன் பெயரை பதிவிட்டிருந்தார். ஆனால் அஷ்வினை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக்கில் பெயரை பதிவி செய்திருந்த நிலையில், சிட்னி தண்டர்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் பிக் பாஷ் லீக்கில் விளையாட இருக்கும் முதல் இந்தியர் என்ற பெய்ரை பெற்றார்.
Ravichandran Ashwin – முழங்காலில் காயம்
இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார். அவருக்கு முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தினால் இந்த சீசனில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரவிச்சந்திரன் அஸ்வின் இத்தொடருக்காக சென்னை பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவருக்கு முழங்கால் பகுதியில் காயமடைந்தது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டத்தை காரணமாக கூறி பிக் பாஷ் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
About the Author
R Balaji