2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் புகைப்படம் வெவ்வேறு பெயர்களுடன் பல முறை பயன்படுத்தப்பட்டதாகவும், அது தேர்தல் முடிவைப் பாதித்ததாகவும் ராகுல் காந்தி இன்று குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் இந்த ஹைட்ரஜன் குண்டு வெகுவான பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு நாளில் காங்கிரஸ் முகவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று சால்ஜாப்பு கூறியுள்ளது. “தி எச் ஃபைல்ஸ்” என்ற தலைப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஹரியானா […]