சுனார்: உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 6 பயணிகள் உயிரிழந்தனர்.
சுனார் ரயில் நிலையத்தில் இன்று காலையில் சோபன் – பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் வந்தடைந்தனர். ரயில் 4-வது நடைமேடையில் நின்றதும், அந்த ரயிலிலிருந்து இறங்கிய சில பயணிகள் குறுக்கு வழியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது, மூன்றாவது பிளாட்பார்ம் வழியாகச் செல்லும் கல்கா மெயில் ரயில் அவர்களின் மீது மோதியது. இதில் பெண் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த பயணிகளின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.