Aakash Chopra on sanju samson IPL Trade: 2026 ஐபிஎல் தொடருக்கு இன்னும் கிட்டத்தட்ட 5 மாதங்கள் உள்ளன, ஆனால் தற்போதில் இருந்தே அதற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் அணிகள் மாற இருக்கின்றனர் என்பதே. மினி ஏலம் வரும் டிசம்பர் பாதியில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் மற்றும் விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட இருக்கிறது. இதற்காக பல திட்டமிட்டலை செய்து வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
வீரர்கள் வர்த்தகம் செய்ப்படுவதில் அதிக எதிர்பார்ப்பில் இருப்பவர் சஞ்சு சாம்சன் தான். அவர் எந்த அணிக்கு செல்ல இருக்கிறார், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுக்குமா அல்லது தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படும் டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்குமா? போன்ற பல எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை கொடுக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற மாற்று வீரரை எதிரணியிடம் கேட்பதாகவும் இதனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்வதாகவும் கூறப்படுகிறது.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தானில் நீடிக்க மாட்டார்
அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி சஞ்சு சாம்சக்கு டெல்லி அணி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை கேட்ப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், இது தொடர்பான சாத்தியகூறுகளை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். “சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீடிக்க மாட்டார் போலிருக்கிறது. இருப்பினும் ரூ. 18 கோடி வீரரை விட்டுச் சென்றால், உங்களுக்கு அதே அளவு நல்ல தரமான வீரர் தேவை.
CSK, KKR அணிகள் என்ன செய்யும்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை விடுவிக்கும் நிலையில், பதிலுக்கு எந்த அணி வீரரை திரும்ப தர முடியும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொருத்தவரையில் முழு பண ஒப்பந்தத்தில் மிகுந்த ஆர்வம் காட்டும். அதுவே டெல்லி அணி அதை பொருட்படுத்தாது. இருந்தாலும் சஞ்சு சாம்சனை தங்களது அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் ரூ.18 கோடியை விடுவிக்க வேண்டும். ஆனால் கேகேஆர்-க்கு அந்த பிரச்சனை இருக்காது. ஏனென்றால் அவர்கள் வெங்கடேஷ் ஐயரை விடுவித்தால், அந்த பணத்தை ஒரு நொடியில் விடுவிக்க முடியும்.
சஞ்சு சாம்சன் CSKவை நோக்கி செல்ல முடியுமா? என்று கேட்டால், அங்கேயும் பணத்தை விடுவிக்க ஒரு வழி இருக்கிறது. ஆனால் அந்த உரையாடல் நடக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.
டிரிஸ்டன் ஸ்டப்ஸை வர்த்தகம் செய்ய வாய்ப்பு
சஞ்சு சாம்சனுக்கு டெல்லி அணி செல்கிறது என்றும், டிரிஸ்டன் ஸ்டப்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்கிறது என்றும் செய்திகள் வந்தது. டிரிஸ்டன் ரூ. 10 கோடிக்கும், சஞ்சு சாம்சன் ரூ. 18 கோடிக்கும் விற்கப்படுவதால், இன்னும் ரூ.8 கோடி பற்றாக்குறை இருக்கும். இருப்பினும் அது நடக்குமா? சஞ்சு சாம்சன் தங்கள் பக்கம் வந்தால் டெல்லி அணிக்கு கவலை இல்லை. ஏனென்றால், சஞ்சு சாம்சன் டெல்லி மைதானத்தில் சிறப்பாக விளையாடுவார். அதே சமயம் கீப்பிங் மற்றும் தொடக்க வீரராகவும் களம் இறங்கி விளையாடுவார். எனவே அவர்கள் ஜேக்-ஃப்ரேசர் மெக்கர்க்கை விடுவிக்கலாம். இதனால், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை டெல்லி அணி விடுவிக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
About the Author
R Balaji