சென்னை: புதிதாக சென்னைக்கு அருகே பரந்தூரில் அமைய உள்ள பசுமை விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களில் இதுவரை 1000 ஏக்கர் நிலங்கள் கையப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்காக ரூ.400 கோடி வழங்கப்பட்டு உள்ளதாகவும் வருவாய்த்துறை அறிவித்துள்ளது. சென்னைக்கான இரண்டாவது பன்னோக்கு விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இது பசுமைவெளி விமான நிலையமாக உருவாக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இந்த பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் 5,320 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இது […]