திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: ஐபிசி நிறு​வனம் உடனடி​யாக “மில்​லர்” என்ற பெயரைத் திரைப்​படத் தலைப்​பில் இருந்து நீக்க வேண்​டும் என்​று, தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: தமிழீழ விடு​தலைக்​காக தன்​னு​யிரை அர்ப்​பணித்த முதல் கரும்​புலி வீரர் மில்​லர், தமிழீழ வரலாற்​றின் நெஞ்சை நெகிழ​வைக்​கும் மாபெரும் தியாகத்​தின் உரு​வம். அவரின் பெயரை ஐபிசி நிறு​வனம் “மில்​லர்” என்​னும் பெயரில் திரைப்​படம் தயாரிப்​ப​தாகச் செய்​தி​களில் வெளி​யாகி​யுள்​ளது.

அவரின் பெயரைப் பொழுது​போக்கு நோக்​கில் பயன்​படுத்​து​வது, தமிழர் உணர்​வு​களை மிதித்​து, தமிழ் ஈழ விடு​தலைப் போராட்​டத்​தை​யும், 50 ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட மாவீரர்​களின் தியாகத்​தை​யும் இழிவு படுத்​து​வ​தாகும். எனவே, ஐபிசி நிறு​வனம் உடனடி​யாக “மில்​லர்” என்ற பெயரைத் திரைப்​படத் தலைப்​பில் இருந்து நீக்க வேண்​டும். தமிழர் தியாக வரலாற்​றை, எந்த வகை​யிலும் வணிக ரீதி​யாகப் பயன்​படுத்​தக் கூடாது.

இது​போன்ற முயற்​சிகளை எதிர்​காலத்​தில் மேற்​கொண்​டாலும், எங்​கள் கட்சி உலகெங்​கிலும் பரவி வாழும் 12 கோடி தமிழர்களிடமும் ஆதரவு திரட்​டி, மாபெரும் மக்​கள் போராட்​டங்​களை முன்​னெடுக்​கும் என்று எச்​சரிக்​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.