Jio BSNL Partnership: நாட்டில் டிஜிட்டல் இணைப்பை விரிவுபடுத்துவதில் ஒரு புதிய மற்றும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுடன் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டாண்மை நெட்வொர்க் கவரேஜை வலுப்படுத்துவத உதவும். அதுமட்டுமில்லாமல், முன்னர் சிக்னல் கிடைப்பது கடினமாக இருந்த தொலைதூரப் பகுதிகளிலும் வேகமான இணைய அணுகல் (‘இன்டர்-சர்க்கிள் ரோமிங்’ மூலம்) செயல்படுத்தப்படும். குறிப்பாக, பிஎஸ்என்எல் நெட்வொர்க் வலுவாக உள்ள பகுதிகளில், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற இணைப்பு (seamless connectivity) கிடைப்பதை இது உறுதி செய்யும். இந்தக் கூட்டணி, வலுவான கிராமப்புற நெட்வொர்க்கைக் கொண்ட பிஎஸ்என்எல்-ஐ, நாட்டின் முன்னணி தனியார் நிறுவனங்களில் ஒன்றான ஜியோவுடன் இணைக்கிறது. இந்த நடவடிக்கை ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi!) போன்ற பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, சந்தையில் அதிக போட்டி மற்றும் அழுத்தத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
தொலைத்தொடர்புத் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவும், அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளன. இந்தக் கூட்டாண்மையின் முக்கிய நோக்கம், ஜியோவின் சொந்த கவரேஜ் குறைவாக உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இணைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதாகும். இந்த உத்தியின் முதல் கட்டமாக, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள பயனர்களுக்காக ஜியோ இரண்டு புதிய இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங் (ICR) ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஜியோ கவரேஜ் இல்லாத பகுதிகளில் அதன் பயனர்கள் தடையின்றி நெட்வொர்க் சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்வதே ஆகும். இந்தத் திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்யும் ஜியோ பயனர்கள், அழைப்பு (Voice), தரவு (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளுக்காக BSNL-இன் நெட்வொர்க்கைப் பயன்படுத்த முடியும்.
இப்போது திட்டத்தின் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்:
டெலிகாம் டாக் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜியோ இரண்டு இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங் (ICR) திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது ₹196 விலையிலும் இரண்டாவது ₹396 விலையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. ₹196 திட்டம் பயனர்களுக்கு 2 ஜிபி டேட்டா, 1,000 நிமிட வாய்ஸ் காலிங் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இரண்டாவது திட்டம், ₹396 ஆகும். இந்த விலையிலும், 10 ஜிபி டேட்டாவுடன் வருகிறது, ஆனால் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வரம்புகள் தினமும் 1,000 ஆகும். இந்தத் திட்டங்களைப் பொறுத்தவரை, இரண்டு திட்டங்களும் பிஎஸ்என்எல்லின் ஐசிஆர் நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படும் என்று ஜியோ தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது ஜியோ, ஏர்டெல் அல்லது விஐ போன்ற பிற நெட்வொர்க்குகளில் அவற்றைப் பயன்படுத்த முடியாது.
₹196 திட்டம்: 28 நாட்கள் செல்லுபடியாகும். இதில் 2GB டேட்டா, 1,000 நிமிட வாய்ஸ் கால்கள் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன.
₹396 திட்டம்: 28 நாட்கள் செல்லுபடியாகும். இதில் 10GB டேட்டா, 1,000 நிமிட வாய்ஸ் கால்கள் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன.
கிராமப்புறங்களில் நெட்வொர்க்கை மேம்படுத்துவதில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது
தொலைதூர கிராமப்புறங்களில் நெட்வொர்க் கவரேஜை வழங்க ஜியோ தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக, நிறுவனம் இப்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி ஜியோவின் அணுகல் குறைவாக உள்ள பகுதிகளில் அதன் நெட்வொர்க்கை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது பயனர்களுக்கு தடையற்ற சேவையை வழங்க உதவும். இது தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்டது. ராஜஸ்தானின் உமைத் கிராமத்தில் ஒரு 4G தளம் சோதிக்கப்பட்டது, அங்கு பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ இடையேயான ஐசிஆர் சோதனை வெற்றிகரமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நெட்வொர்க் பகிர்வு தொலைதூர பகுதிகளில் இணைப்பை மேலும் மேம்படுத்த முடியும் என்பதை இந்த சோதனை காட்டுகிறது.
About the Author
Vijaya Lakshmi