டொயோட்டா இந்தியாவின் பிரசத்தி பெற்ற 2026 ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடலில் பல்வேறு டிசைன் மாற்றங்கள், இன்டீரியர் மேம்பாடு மற்றும் நவீன வசதிகளுடன் பவர்டிரையின் தேர்வுகளில் BEV, 2.8 லிட்டர் டீசல் என்ஜின், 2.7 லிட்டர் பெட்ரோல், 48V ஹைபிரிட் இறுதியாக ஹைட்ரஜன் FCV என மாறுபட்ட தேர்வுளில் கிடைக்க உள்ளது.
இந்திய சந்தையில் டீசல், பெட்ரோல் மற்றும் 48V ஹைபிரிட் மாடல்கள் வரக்கூடும் ஆனால் EV, 2028ல் வரவுள்ள ஹைட்ரஜன் பற்றி எந்த உறுதியான தகவலும் தற்பொழுது வெளியாகவில்லை.
2026 Toyota Hilux
1966ல் பயணத்தை துவங்கிய இந்த ஹைலக்ஸ் பிக்கப் இதுவரை 133 நாடுகளில் சுமார் 13 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்துள்ளது. தாய்லாந்தில் வெளியிடப்பட்டுள்ள 9வது தலைமுறை ஹைலக்ஸ் தோற்ற அமைப்பில் முந்தைய மாடலை விட மிகவும் ஆக்ரோஷமான தோற்ற வடிவமைப்பினை வெளிப்படுத்துவதுடன் “Tough and Agile” என்பதனை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா எழுத்துகள் கொண்டுள்ள மிகவும் நேர்த்தியான இணைக்கப்பட்ட மெல்லிய ஹெட்லேம்ப் பெற்றதாகவும், மிகி நேர்த்தியான கிரிலுடன் வாடிக்கையாளர் தேவையை பிரதிபலிக்கும் வகையில் முழு வரிசையிலும் இரட்டை கேப் கொண்டு, வசதி மேம்பாடுகளில் புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட பின்புற டெக் படி மற்றும் கார்கோ பகுதியை எளிதாக அணுகுவதற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பக்கவாட்டில் படிகளும் உள்ளது.
அதேவேளையில், BEV வேரியண்டிற்கு மேம்பட்ட ஏரோடைனமிக்ஸ் மூடிய நிலையில் மிக ஸ்டைலிஷான கிரில்லைக் கொண்டுள்ளது.
இன்டீரியரில் 12.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று மிக நவீனத்துவமான டிசைனை பயன்படுத்தியுள்ள டொயோட்டா ஆப் வழியாக பல்வேறு இணைக்கப்பட்ட வசதிகள், வயர்லெஸ் சார்ஜிங், USB சார்ஜிங் போர்ட் என பலவும் சேர்க்கப்பட்டுள்ளது.


என்ஜின் ஆப்ஷன்
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து முதற்கட்டமாக ICE வகையில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சினை 48V லித்தியம்-அயன் பேட்டரி, மின்சார மோட்டார்-ஜெனரேட்டர் மற்றும் DC-DC கன்வெர்ட்டர் கொண்டதாக அமைந்திருக்கும். டொயோட்டா கிழக்கு ஐரோப்பிய சந்தைகளுக்கு 2.8 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் பதிப்புகளை தொடர்ந்து வழங்கும்.
இந்த மாடல் 1-டன் பே லோடு மற்றும் 3.5-டன் இழுக்கும் திறனனுடன் அதன் 700 மிமீ நீர் நிரம்பிய ஆழத்தில் பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.
Hilux BEV
முதன்முறையாக பாடி ஆன் ஃபிரேம் சேஸிஸை பெற்ற எலக்ட்ரிக் வெர்ஷனில் வந்துள்ள ஹைலக்ஸ் இந்த முறை ஆல் வீல் டிரைவ் வசதியுடன் சுமார் 240 கிமீ ரேஞ்ச் வழங்கும் திறனை பெற்ற 59.2 kWh லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டு மற்றும் இரட்டை மோட்டாருடன் மின்சார Hilux, முன்புறத்தில் 205 Nm டார்க் மற்றும் பின்புறத்தில் 268.6 Nm உடன் ஆல்-வீல் டிரைவை வழங்குகிறது.
இதன் 715 கிலோ சுமைதாங்கும் திறன், 1,600 கிலோ இழுக்கும் திறனை கொண்டுள்ளது.


Hilux FCV
2028 ஆம் ஆண்டு உற்பத்திக்கு செல்ல ஹைட்ரஜன் நீண்ட தூரம் மற்றும் விரைவான எரிபொருள் நிரப்பும் திறன்களுடன் இணைத்து, முதற்கட்டமாக ஐரோப்பா முழுவதும் டொயோட்டாவின் ஹைட்ரஜன் அமைப்பினை பயன்படுத்தி விற்பனைக்கு வரக்கூடும்.
மிக சிறப்பான பாதுகாப்பினை வழங்க டொயோட்டா டி-மேட் தொகுப்பு ஆனது சந்தையைப் பொறுத்து புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய அம்சங்களை உள்ளடக்கியது. முன்கூட்டிய ஓட்டுநர் உதவி, குறைந்த வேக முடுக்கம் அடக்குதல், அவசரகால ஓட்டுநர் நிறுத்தம், பிளைன்ட் ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பான வெளியேறும் உதவி போன்ற அமைப்புகள், டிரைவர் மானிட்டர் கேமராவுடன் கிடைக்கின்றன.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் BEV மாடலுடன் தொடங்கும், அதைத் தொடர்ந்து 2026ல் ஹைப்ரிட் 48V, தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளுக்கான ICE மற்றும் 2028ல் எரிபொருள் செல் மாறுபாடு கிடைக்க உள்ளது.







