CSK Ravidnra Jadeja – RR Sanju Samson Trade latest News: 2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கான முன்னதாக மினி ஏலமானது நடைபெற இருக்கிறது. சில நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் பேசப்பட்டு வருவதால், நாளுக்கு நாள் ரசிகர்கள் இடையேயான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக இருப்பதாக கூறப்பட்டு வருவதே இந்த எதிர்பார்ப்புகளுக்கு காரணம் ஆகும்.
Add Zee News as a Preferred Source
மீண்டும் தொடங்கிய பேச்சுவார்த்தை
சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் செய்ய விரும்புவதாக 2025 ஐபிஎல் தொடர் முடிந்ததில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. இந்த இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைக்கும் டிமெண்டிற்கு சிஎஸ்கே அணி ஒப்புக்கொள்ளததால் அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில், மீண்டும் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.
அதாவது, சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியதாகவும் சஞ்சு சாம்சன் வேண்டும் என்றால் அதற்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் டெவால்ட் ப்ரீவிஸை என இரண்டு ஆல் ரவுண்டர்களை தர வேண்டும் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிமெண்ட் வைத்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், ஜடேஜாவை சிஎஸ்கே அணி விடுவிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணி செய்யும் மிகப்பெரிய தவறு
இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற்றும் முடிவில் இருந்தால், அதி சிஎஸ்கே அணி செய்யும் மிகப்பெரிய தவறு என முன்னாள் குஜராத் வீரர் பிரியான்க் பஞ்சால் கூறி உள்ளார். அவர் கூறி உள்ளதாவது, ஜடேஜாவை டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பிவிட்டு சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்குவது மிகப்பெரிய தவறு. ஏனென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லெஜெண்ட்ஸ் லிஸ்ட்டில் ஜடேஜாவும் உள்ளார். அவர் ஒரு நட்சத்திர வீரராக வலம் வருகிறார். தனது முழு பங்களிப்பையும் சிஎஸ்கே அணிக்காக வழங்கி உள்ளார்.
அப்படி இருக்கையில், அவரை போல ஒரு நட்சத்திர வீரரை வெளியேற்றுவது சரியானதாக இருக்காது. ரவீந்திர ஜடேஜா, சிஎஸ்கே அணி 5 கோப்பை வென்றதில் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறார். அவரை வெளியே அனுப்புவது சரியான முடிவாக இருக்காது. அது நியாயமற்றதும் கூட என பிருயான்க் பஞ்சால் கூறி இருக்கிறார். முன்னாள் வீரர் கூறியது போல ரவீந்திர ஜடேஜா, சிஎஸ்கே அணிக்கு தனது முழு பங்களிப்பையும் தொடந்து வழங்கி வருகிறார். அவர் அந்த அணிக்காக 254 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ச்3260 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். பந்து வீச்சில் 170 விக்கெட்களை வீழ்த்தி இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டர் வீரராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji