கியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 2026 செல்டோஸ் எஸ்யூவி மாடலில் முதன்முறையாக ஹைபிரிட் பவர்டிரெயின் ஆப்ஷனை பெற்றதாக இந்திய சந்தைக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் சர்வதேச அளவில் டிசம்பர் 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோற்ற அமைப்பில் சமீபத்தில் அறிமுகம் செயப்பட்ட புதிய டெல்லுரைடு அடிப்படையிலான டிசைனை பகிர்ந்து கொள்ள உள்ள செல்டோஸ் காரின் முன்புறத்தில் மாறுபட்ட எல்இடி ரன்னிங் விளக்குடன் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் மற்றும் செங்குத்தான கிரல் அமைப்பு மாறுபட்டதாகவும் வழக்கமான கியா பாரம்பரிய கிரில் அமைப்பினை தக்கவைத்துக் கொண்டிருக்கும்.
இன்டீரியரில் மிக சிறப்பான வகையில் சமீபத்தில் வந்த சிரோஸ் மாடலை போல அகலமான தொடுதிரை இன்ஃபோட்யின்மென்ட் சிஸ்ட்டத்துடன் கிளஸ்ட்டர் என பலவும் பெற்றதாக அமைந்திருக்கலாம்.
என்ஜின் ஆப்ஷன் தற்பொழுது உள்ள மூன்று என்ஜின்களும் தொடர்ந்து வழங்கப்பட்டாலும் மிக முக்கியமாக இந்த முறை ஹைபிரிட் ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுவதனால் சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடலாக செல்டோஸ் மாற உள்ளது, இதனால் மிக கடுமையான சவாலினை விக்டோரிஸ், கிராண்ட் விட்டாரா, ஹைரைடர் போன்றவற்றுக்கு ஏற்படுத்த உள்ளது.
செல்டோஸில் 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக ஐஎம்டி மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது.
புதிய 1.5-லிட்டர் VGT டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 bhp பவர் மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 6 ஸ்பீடு இன்டெலிஜென்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. 115hp 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல், ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.
இந்திய சந்தையில் முதல் காலாண்டில் விற்பனைக்கு புதிய கியா செல்டோஸ் எதிர்பார்க்கப்படுகின்றது.