எகிப்து: சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்து – 2 பேர் பலி

கெய்ரோ,

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க நேற்று பஸ்சில் வெளிநாட்டினர் சென்றனர். அந்த பஸ்சில் 27 ரஷியர்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

இந்நிலையில், ஹர்ஹடா – கெய்ரோ தேசிய நெடுஞ்சாலையில் ரஸ் ஹரிப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சுற்றுலா பஸ் மீது சாலையில் எதிரே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் பஸ் விபத்தில் எகிப்தை சேர்ந்த பஸ் டிரைவர், ரஷிய சுற்றுலா பயணி என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 39 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.