Pakistan Fan And Krishnamachari Srikkanth Fight: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் அண்டை நாடுகளாக இருப்பதால் எல்லையிலும், விளையாட்டு அரங்கிலும் அடிக்கடி மோதல் ஏற்படுவது இயல்பு. கடந்த காலங்களில் சாகித் அப்ரிடி – கௌதம் கம்பீர் ஆகியோர் மைதானத்தில் நேரில் மோதிய நிகழ்வுகள் ரசிகர்களுக்கு மிகவும் நன்றாகவே நினைவில் இருக்கும். அதேபோன்று, இந்தியா–பாகிஸ்தான் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வார்த்தை மோதலும் தொடர்கிறது.
Add Zee News as a Preferred Source
1989 போட்டியை நினைவு கூர்ந்த சஞ்சய் மஞ்சுரேக்கர்
இந்த நிலையில், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து முன்னாள் இந்திய அணி கேப்டன் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த்திடம் சண்டையிட்டதை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் நினைவு கூர்ந்துள்ளார்.
1989-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அதில் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பொறுப்பு வகித்தார். இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 16-வது வயதில் அறிமுகமானதும், விரைவில் கிரிக்கெட் ஜாம்பவானாக எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த்தை தாக்கிய பாகிஸ்தான் ரசிகர்
இந்த போட்டி நடந்து கொண்டபோது, திடீரென ஒரு பாகிஸ்தான் ரசிகர் இந்தியா-வுக்கு எதிராக கோஷமிட்டுக்கொண்டே மைதானத்துக்குள் நுழைந்து, இந்திய கேப்டன் ஸ்ரீகாந்தின் சட்டையை பிடித்து பொத்தான்களை உதிர்த்து தாக்கினார். பதிலுக்கு ஸ்ரீகாந்தும் அவரை தாக்கினார். இந்திய விக்கெட் கீப்பராக இருந்த கிரன் மோர் தனது கேப்டனை அடிக்க வந்த அந்நபரை காலால் உதைத்தார்.
இந்த நிகழ்வை பற்றி அந்த போட்டியில் 113 ரன்கள் அடித்து நாட் அவுட் ஆகாமல் இருந்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, “அந்த போட்டியின்போது நான் மிட் ஆஃப் பகுதியில் ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டபடி மைதானத்திற்குள் நுழைந்து கேப்டன் ஸ்ரீகாந்த்தை நேரடியாகவே தாக்கினார். இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அவரது சட்டை கிழிந்தது; பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக உள்ளே விரைந்து வந்து, அந்த ரசிகரை வெளியேற்றினர்.
கிரண் மோர் தனது கேப்டனை பாதுகாக்க அந்த பாகிஸ்தான் ரசிகரை காலால் உதைத்தார். அந்த மோதல் ஒரு தெரு சண்டை போல் மைதானத்தில் நடந்தது என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறினார்.
About the Author
R Balaji