சென்னை,
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை உச்சி முகர்வது இதுவே முதல்முறையாகும்.இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி தீர்த்தனர். அந்த வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இன்று சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து அவர் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின் போது ஹர்மன்பிரீத் கவுரிடம் , பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியா அல்லது தோனியா என கேட்கப்பட்டது. அதற்கு தோனி தான் பிடிக்கும் என ஹர்மன்பிரீத் கவுர் பதிலளித்தார்.
தொடர்ந்து சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், சென்னைக்கு வரும்போதெல்லாம் மக்கள் அதிக அளவில் ஆதரவு அளிப்பார்கள் எனவும் ஹர்மன்பிரீத் கவர் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் மற்றொரு நிழச்சியில் பேசிய ஹர்மன்பிரீத் கவர், தமிழில் ரஜினிகாந்த் தான் பிடித்த நடிகர் என தெரிவித்தார்