திமுக அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ​தி​முக அரசின் சாதனை​களை தொகுதி முழு​வதும் விளம்​பரப்​படுத்த வேண்​டும் என்று ‘உடன்​பிறப்பே வா’ நிகழ்ச்​சி​யில் நிர்​வாகி​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் 2026-ம் ஆண்டு நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, திமுக தலை​வரும், முதல்​வரு​மான ஸ்டா​லின், கட்சி நிர்​வாகி​களை நேரடி​யாக (ஒன் டு ஒன்) சந்​திக்​கும் ‘உடன்​பிறப்பே வா’ என்ற சந்​திப்பு நிகழ்ச்சி நடத்​தப்​பட்டு வரு​கிறது. சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் இது​வரை 81 தொகு​தி​களின் நிர்​வாகி​களை ஸ்டா​லின் நேரடி​யாக சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளார்.

தொடர்ந்து 38-வது நாளாக நேற்று நடந்த நிகழ்​வில் போடி​நாயக்​க​னூர், சாத்​தூர் தொகு​தி​களின் நிர்​வாகி​களை ஸ்டா​லின் சந்​தித்​தார். அப்​போது, ‘மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்​களில் தகு​தி​யானவர்​கள் இருந்​தால், அவர்​களைக் கண்​டறிந்து உரிமைத் தொகை பெற்​றுத்தர திமுக​வினர் உதவ வேண்​டும். போடி தொகு​தியை இந்த முறைதிமுக கூட்​டணி வெல்ல வேண்​டும்.

சாத்​தூர் தொகு​தி​யில் மாற்​றம் நிகழ்ந்​தா​லும் கலங்​காமல் தொடர்ந்து பணி​யாற்ற வேண்​டும். திமுக அரசின் சாதனை​களை தொகுதி முழு​வதும் விளம்​பரப்​படுத்த வேண்​டும்’ என்​பது உட்பட பல்​வேறு அறி​வுறுத்​தல்​களை நிர்​வாகி​களுக்கு ஸ்டா​லின் வழங்​கிய​தாகக் கூறப்​படு​கிறது. ‘உடன்​பிறப்பே வா’ சந்​திப்​பில் முதல்​வருடன், தலை​மைக்கழக நிர்​வாகி​கள், மண்​டலப் பொறுப்​பாளர்​கள், மாவட்​டச்செய​லா​ளர்​கள் பங்​கேற்​பது வழக்​கம். சமீபத்​திய சந்​திப்​பு​களில் இளைஞர் அணி முக்​கிய நிர்​வாகி​கள், துணை முதல்​வர் உதயநிதி ஆதரவு பெற்​றவர்​களும் கலந்​து​கொள்​கின்​றனர் என்று அறி​வாலய வட்​டாரங்​கள்​ தெரிவிக்​கின்​றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.