
பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த 57 வயதான பெண், தனியார் நிறுவனத்தில் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் உள்ளார். இவரை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வாட்ஸ்அப் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.
மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, ‘‘உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்திருக்கிறது. அதில் 4 பாஸ்போர்ட்கள், 3 கிரெடிட் கார்டுகள், போதை பொருட்கள் உட்ப‌ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. நீங்கள் உடனடியாக மும்பைக்கு வராவிட்டால், உங்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்படும்” என எச்சரித்தார்.