
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள் அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், வாங்கதேச மக்களின் நலன், அந்த நாட்டின் அமைதி, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகள், ஸ்திரத்தன்மை உள்ளிட்டவற்றுக்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்துக்காக தொடர்புடைய அனைவருடனும் நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.