நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு வழக்கை விசா​ரிக்​கும் என்ஐஏ அதி​காரி​கள் கூறிய​தாவது: ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா மருத்​து​வ​மனை​யில் உமர் நபி மருத்​து​வ​ராக பணி​யாற்றி வந்​தார். அங்கு சக மருத்​து​வர்​கள் கைது செய்​யப்​பட்ட நிலை​யில் உமர் நபி தலைமறை​வா​னார். இதன்​பிறகு ஹரி​யா​னா​வின் நூ நகரில் அவர் 10 நாட்​கள் பதுங்கி இருந்​துள்​ளார்.

அங்கு ஹிதா​யத் காலனி​யில் உள்ள வீட்​டில் அவர் தங்​கி​யிருந்து உள்​ளார். இந்த வீடு, அல் பலா மருத்​து​வ​மனை ஊழியர் சோகிப்​பின் உறவினர் வீடு ஆகும். சோகிப் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். வீட்​டின் உரிமை​யாளர் தலைமறை​வாகி​விட்​டார். அவரை தீவிர​மாக தேடி வரு​கிறோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.