அதிமுக ஒன்றிணைப்பு: "செங்கோட்டையன், தினகரனுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன்" – ஓ. பன்னீர்செல்வம்

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “அதிமுக தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கின்ற குழுவாகச் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது குழுவின் கருத்து, தமிழக மக்களின் கருத்து அதிமுக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும்.

எஸ்ஐஆர் ஒவ்வொருவருக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனைப் பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்னை இல்லை.

SIR
SIR

ஆனால் எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. மத்திய அரசு கூர்ந்து கவனித்து பாமர மக்களும் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் அமைக்கப்பட வேண்டும்.

எஸ்ஐஆர் காலக்கெடு நீட்டிக்க வேண்டும். இது மக்களின் கோரிக்கை. கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

பத்திரிகையாளர்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பது எனது கருத்து” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன்
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன்

‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?’ என்ற கேள்விக்கு, “அரசியலில் எதுவும் நடக்கலாம் எங்களுக்கும் தனிக் கொள்கை உள்ளது. அந்தக் கொள்கையின் வடிவில் எங்களுக்கு வாய்ப்பு தந்தால், இணைவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன.

செங்கோட்டையனுடனும், தினகரனுடனும் தினம்தோறும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைய அதிகமான வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.