Sai pallavi:“மரியாதையான, சிறந்த நடிகை" – சாய் பல்லவி குறித்து நடிகர் அனுபம் கெர் பாராட்டு

கோவாவில் நடந்து வரும் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் இவ்விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் முதல் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமரன் படக்குழுவினர் கோவா சென்றனர். இவ்விழாவில் பழம்பெரும் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டப் பலப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது சாய் பல்லவியுடன் நடிகர் அனுபம் கெர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த சந்திப்புக்குப் பிறகு அனுபம் கெர் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “சாய் பல்லவி உண்மையானவர், பாசமுள்ளவர், தனித்துவமானவர், மரியாதையானவர் என உணர்ந்தேன். திறமையான நடிகை. இந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவரின் திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகை சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.