Gautam Gambhir’s Coach Tenure: 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட்-க்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற கௌதம் கம்பீரின் தலைமையில், இந்திய அணியின் செயல்பாடு பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறதுடன், பல மோசமான சாதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source
பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முயற்சிகள் மற்றும் விமர்சனங்கள்:
விமர்சனங்கள்: கௌதம் கம்பீர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் T20-க்கான உத்திகளைப் பயன்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆல்-ரவுண்டர் மீது அதிக கவனம்: கம்பீரின் பயிற்சியின் கீழ், வெள்ளைப் பந்து மற்றும் சிவப்புப் பந்து கிரிக்கெட்டிலும் ஆல்-ரவுண்டர்களுக்கு (All-Rounders) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறை: இதனால் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட அனுபவம் கொண்ட நிபுணத்துவ பேட்ஸ்மேன்களின் (Specialist Batsmen) எண்ணிக்கை குறைந்துவிட்டது.
தொடர் மாற்றங்கள்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் தலா 3 பேட்ஸ்மேன்களை மட்டுமே களமிறக்கி, மீதமுள்ள இடங்களில் ஆல்-ரவுண்டர்களை சேர்த்தது.
பேட்டிங் வரிசை மாற்றம்: பேட்டிங் வரிசையை (Batting Order) அடிக்கடி மாற்றியதால், வீரர்களுக்கு அவர்களது பொறுப்புகள் தெளிவாகத் தெரியாமல் குழப்பம் நிலவியது.
சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் பெரும் தோல்விகள்:
1. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான குவாஹாட்டி டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. சொந்த மண்ணில் (Home Ground) மற்றும் ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு இதுவே மிகப்பெரிய தோல்வி ஆகும்.
2. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வி.கடைசியாக 2010-ல் நாக்பூரில் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது.
3. கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இழந்தது.இதற்கு முன்னர் 1999-2000ல் தென் ஆப்பிரிக்கா 2-0 எனத் தொடரை வென்றிருந்தது.
4. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரை முழுமையாக இழந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு முன், கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்தது.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட அதிர்ச்சி (அக்டோபர் 2024):
5. சொந்த மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது.இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.
6. கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.இதற்கு முன் 2012-ல் இங்கிலாந்திடம் தோற்றது.
7. முதல் முறையாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 3-0 என ஒரு அணி (நியூசிலாந்து) முழுமையாகத் தோற்கடித்தது.
8. கடந்த 1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது.
9. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இது சொந்த மண்ணில் இந்தியாவின் மிகக் குறைந்த ஸ்கோர் மற்றும் ஆசியாவில் ஒரு அணியின் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோர் இதுவாகும்.
10. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி.இதற்கு முன் 2005-ல் பாகிஸ்தானிடம் தோற்றது.
11. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி.
மற்ற முக்கிய டெஸ்ட் தொடர் தோல்விகள் :
12. ஒரு வருடத்தில் சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி (நியூசிலாந்துடன் 3 + இங்கிலாந்துடன் 1).41 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய மோசமான சாதனை.
13. பார்டர் கவாஸ்கர் டிராபியை (Border Gavaskar Trophy) 10 ஆண்டுகளுக்குப் பிறகு இழந்தது (3-1 என ஆஸ்திரேலியாவிடம் தோல்வி).
14.கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு BGT தொடரில் இரண்டுக்கும் மேற்பட்ட (மூன்று) போட்டிகளில் தோல்வி. அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி டெஸ்டில் தோல்வி.
15. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) 13 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் தோல்வி.
16. இங்கிலாந்து தொடரை 2-2 என டிரா செய்தது.இங்கிலாந்தில் தொடரை வெல்ல கிடைத்த சிறந்த வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
About the Author

Shiva Murugesan
Shiva Murugesan
…Read More