லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரிசா மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காரில் சென்றுள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். நள்ளிரவு லக்கிம்பூர் கேரியின் சாரதா ஷிப்ஹொன் என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். கார் டிரைவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று படுகாயமடைந்த கார் டிரைவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பயணத்தின்போது கார் டிரைவர் உறங்கியதே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.