Gautam Gambhir: தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலாவதாக நேற்று (நவம்பர் 26) இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை தென்னாப்பிரிக்கா அணி வொயிட்வாஷ் செய்தது. அதுவும் சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மீது பலரும் கடுமையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர். சிலர் தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறி வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
இந்திய அணியின் தொடர் தோல்விகள்
கெளதம் கம்பீர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு காரணம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடர் தோல்விகள்தான் காரணமாகும். 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கில் இந்திய அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது. இதனால் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவது சந்தேகமாகி உள்ளது. இந்த டெஸ்ட் சைக்கிளில் இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளை டிரா செய்தால் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனாலேயே கெளதம் கம்பீரின் மோசமான வழிநடத்தலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
கம்பீரை விளாசிய DC உரிமையாளர்
இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பார்த் ஜிண்டால், கம்பீரின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார் அந்த பதிவில், சொந்த மண்ணில் இப்படியொரு ஒரு தோல்வியை இந்திய அணி சந்தித்ததை நான் பார்த்தே இல்லை. டெஸ்ட் அணிக்கு ஏற்ற வீரர்களை அணியில் எடுக்காததே இந்த தோல்விக்கு காரணம். ரெட் பால் கிரிக்கெட்டில் நமக்கு இருக்கும் அசாத்திய திறமையை இந்த அணி பிரதிபலிக்கவில்லை. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று ஒரு ஸ்பெஷ்லான கோச்சை நியமிக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
அழுத்தத்தில் பிசிசிஐ
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கெளதம் கம்பீர் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது உத்திகள் எடுபடவில்லை என்று ஜிண்டால் சுட்டிக்காட்டி உள்ளார். கெளதம் கம்பீர் மீதான ஜிண்டாலின் விமர்சனம் அனைவரது மத்தியிலும் கவனம் ஈர்த்துள்ளது. ஒருபக்கம் ரசிகர்கள் கம்பீருக்கு எதிராக குரல் எழுப்பி வரும் நிலையில், தற்போது ஐபிஎல்லின் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளரும் போர்கொடி தூக்கி இருப்பது BCCI – க்கு மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
About the Author
R Balaji