7 இருக்கை மஹிந்திரா XEV 9S காரில் எந்த வேரியண்ட்டை வாங்குவது சிறந்தது.! | Automobile Tamilan

இந்தியாவின் பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற 7 இருக்கை மாடலான மஹிந்திராவின் புதிய XEV 9S மாடலில் தற்பொழுது “Pack One Above”, “Pack Two Above”, “Pack Three” மற்றும் “Pack Three Above” என 4 வேரியண்ட்களில் இது கிடைப்பதால், “எதை வாங்குவது லாபம்?” என்ற குழப்பம் பலருக்கும் இருக்கலாம்,  இதனை தீர்க்க எந்த வேரியண்டில் என்ன வசதிகள் உள்ளது என அறிந்து கொள்ளலாம்.

XEV 9S Pack One Above விலை ரூ. 19.95 லட்சம் – 21.95 லட்சம்

542 கிமீ ரேஞ்சுடன் 59kWh மற்றும் 79kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களும் கிடைப்பது இதன் கூடுதல் சிறப்பாக கருதப்படும் நிலையில் வசதிகளை பொறுத்தவரை பனோரமிக் சன்ரூஃப், இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் 6 ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 6 ஏர்பேக்குகள், ரியர் கேமரா உடன் பார்க்கிங் சென்சார், 18 அங்குல ஸ்டீல் வீல், டிரைவிங் மோடு, 4 லெவல் ரீஜெனேரேட்டிவ்,   மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற பல பிரீமியம் வசதிகளை அனைத்தும் ஆரம்ப நிலை வேரியண்டிலே உள்ளன.

XEV 9S Pack Two Above விலை ₹24.45 லட்சம் – ₹25.45 லட்சம்

600 கிமீ ரேஞ்ச் வழங்கும் 70kWh மற்றும் 656 கிமீ ரேஞ்ச் தரவல்ல 79kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களும் பெற்று லெவல் 2 ADAS பாதுகாப்பு வசதிகள், 360-டிகிரி கேமரா, முன்பக்க பார்க்கிங் சென்சார், 18 இன்ச் அலாய் வீல் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங் போன்றவற்றுடன் வென்டிலேட்டெட் முன் இருக்கைகள் உள்ளது.

new mahindra xev 9s suv interiornew mahindra xev 9s suv interior

XEV 9S Pack Three விலை ரூ.27.35 லட்சம்

79kWh என ஒற்றை பேட்டரி கொண்ட வேரியண்டில் 7 ஏர்பேக்குகள், டிரைவர் சீட் மெமரி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), தானியங்கி அவரசகால பிரேக்கிங் உடன் ADAS பாதுகாப்பு, காற்றோட்டமான இரண்டாவது வரிசை இருக்கைகள், சாவி இல்லாத நுழைவு மற்றும் பயணம், பின்புற விண்ட்ஸ்கிரீன் சன்ஷேட் மற்றும் காற்று சுத்திகரிப்பான் உள்ளது.

XEV 9S Pack Three Above விலை ரூ.29.45 லட்சம்

பேக் த்ரீ வேரியண்டை விட கூடுதலாக ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் பார்க்கிங் உதவி, ஓட்டுநர் மற்றும் முன் பயணிகளின் தூக்கக் கலக்கத்தைக் கண்காணித்தல், காருக்குள் வீடியோ அழைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

சரியான விலையில் வாங்க விரும்பினால், “Pack One Above”  79 kwh வேரியண்ட்டை கண்ணை மூடிக்கொண்டு டிக் அடிக்கலாம். ஆடம்பரத்தை விட, அத்தியாவசியமான மற்றும் நவீன வசதிகள் அனைத்தும் இதிலேயே அடங்கிவிடுகின்றன!

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.