உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தில் இருந்துவந்த நிலையில், நகரமயமாக்கல் மற்றும் பெருநகர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை புதிய அளவுகோல்களைப் பயன்படுத்தி தரவரிசையை மாற்றியுள்ளது. இதன்படி 33வது இடத்தில் இருந்த ஜகார்த்தா முதல் இடம் பிடித்துள்ளது, முதலிடத்தில் இருந்த டோக்கியோ மூன்றாம் இடத்திற்கும் இரண்டாம் இடத்தில் பங்களாதேஷின் டாக்காவும் இடம்பெற்றுள்ளது. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை இந்த மாதம் வெளியிட்டுள்ள […]