Bcci Given Some Advice To Gautam Gambhir: இந்திய அணியின் மூத்த நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது விரக்தியில் இருப்பதாகவும் இதனால் இந்திய அணியில் நிலையற்ற தன்மை நீடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அணியில் அவர் செய்யும் மாற்றங்கள் தவறாக இருப்பதாகவும் இதனால் வீரர்கள் நிலையற்ற தன்மையை உருவாக்குவதாக இருவரும் நினைப்பதாக கூறப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
Gautam Gambhir, Virat Kohli, Rohit Sharma fight: கோலி, ரோகித்துக்கு வலை வீசும் கம்பீர்
அதேபோல் கம்பீர் மூத்த வீரர்களை நீக்கிவிட்டு முழுக்க முழுக்க அவரது பேச்சை கேட்கும் வீரர்களை மட்டும் அணியில் வைத்துக்கொள்ள நினைக்கிறார். அதன் அழுத்தத்தின் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு முடிவை எடுத்ததாகவே கூறப்படுகிறது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் இருவரும் கம்பீருக்கு தங்களது பேட் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Gautam Gambhir: தொடர் தோல்விகள்
இதுமட்டுமல்லாமல் கம்பீரின் கீழ் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட இழந்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் கவுதம் கம்பீருக்கு எதிராக கண்டன் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
BCCI: கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ அறிவுரை
இந்த நிலையில், இது இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பிசிசிஐக்கு வந்திருக்கிறது. இதன் காரணமாக கம்பீருக்கு சில அறிவுறுத்தல்களை பிசிசிஐ வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. வீரர்களிடம் உறமை மேம்படுத்துங்கள், சுமூகமான உறவை கடைப்பிடிப்பதை உறுதிபடுத்துங்கள், வீரர்களுக்கு உங்கள் மேல் அதிருப்தி இருந்தால் எப்படி அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
T20 World Cup: டி20 உலகக் கோப்பை தான் கடைசி?
மேலும், கம்பீருக்கு வரும் டி20 உலகக் கோப்பை தொடர் தான் கடைசியாக இருக்கும் என தெரிகிறது. இந்த உலகக் கோப்பையை நல்ல படியாக வென்றால் கம்பீருக்கு பிரச்சனை இல்லை என்றும் ஒருவேளை வெல்லவில்லை என்றால், அவர் மீது நிச்சயம் பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. 2026 டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji