சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக சிஎம்ஆர்எல் கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. வேளச்சேரி சாலை சந்திப்பு (பீனிக்ஸ் மால் அருகே) மற்றும் ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரையிலான வேளச்சேரி சாலையில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் […]