ஐரோப்பா அல்லாத 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டு, குடியுரிமை உள்ளிட்ட அனைத்து குடியேற்ற (immigration) விண்ணப்பங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை அருகே தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியானதை அடுத்து வெளிநாட்டினரின் விசா கோரிக்கைகள் […]