Is Virat Kohli likely to reach 100 centuries:தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் ஸ்டார் வீரர் விராட் கோலி சதம் அடித்துள்ளது ரசிகரக்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது அது மட்டுமல்லாமல் அவர் பல்வேறு சாதனைகளை படைக்க இது வழி வகுத்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, விராட் கோலி தொடர்ந்து சதம் அடித்து அசத்தியதை பாராட்டும் விதமாக பேசியும் அவர் நிச்சயம் 100 சதங்களை அடிப்பார் என்றும் கூறி புகழ்ந்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
Akash Chopra On Virat Kohli: விராட் கோலி 100 சதங்கள் அடிப்பார்
இது தொடர்பாக பேசிய அவர், “விராட் கோலி அடுத்தடுத்து சதங்கள் அடித்துள்ளார். அவர் சதங்களின் சக்கரவர்த்தி. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்னும் பல சதங்களை அடித்து மொத்த 100 சதங்களை கோலி அடிப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. 2027 உலகக் கோப்பை வரை அவருக்கு சுமார் 40 போட்டிகள் உள்ளன, இதில் அவருக்கு தேவை 16 சதங்கள் மட்டுமே என்றார்.
ஆகாஷ் சோப்ரா மேலும் கூறியதாவது, “இந்த முறை கோலி ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு மாறுபட்ட அணுகுமுறையை எடுத்துள்ளார். ராஞ்சியில் அவர் விளாசிய 7 சிக்ஸர் போன்ற ஆட்ட உற்சாகம் இங்கு குறைவாக இருந்தாலும், நடுநிலை மற்றும் பயனுள்ள ஆட்டமாக இருந்தது.
Ruturaj Gaikwad: சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்
மற்றொரு முக்கிய புதிய தாராள வேடத்தில், ருதுராஜ் கெய்க்வாட் 83 பந்துகளில் 105 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் விக்கெட் நிலையை பாதுகாத்தார். கெய்க்வாட் மற்றும் கோலி மூன்றாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் கூட்டி அணியை வலுவாக்கினர்.ருதுராஜ் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு, துணை கேப்டனின் பதவிக்கு அருகில் இருப்பது அவரது திறமையை சாட்சி செய்கிறது. அவர் பெரும்பாலோராக ஆதிக்க சக்தியாக விளையாடி, முக்கிய ரன்கள் வழங்கியுள்ளார்.”
“ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் திரும்பியதும் ருதுராஜ் கெய்க்வாடின் எதிர்காலம் குறித்து குழப்பங்கள் எழும், ஆனால் இது அவரது கட்டுப்பாட்டிற்கு வெளியான விஷயம்.” இவ்வாறு அவர் கூறினார்.
How many more matches will Virat Kohli play: எத்தனை போட்டிகள் விளையாடுவார்?
2027 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோலி 2027 உலகக் கோப்பையில் 11 போட்டிகள் வரை விளையாட முடியும். ஒருவேளை இந்தியா சீக்கிரமே வெளியேறினால் குறைந்தபட்சம் 6 போட்டிகள் விளையாடும். உறுதிப்படுத்தப்பட்ட போட்டிகள் மட்டும் சேர்க்கப்பட்டால்: 18 ஒருநாள் போட்டிகள் + 11 உலகக் கோப்பை போட்டிகள் வரை; விராட் கோலி இன்னும் 16 சதங்கள் அடிக்க இன்னும் 29 வாய்ப்புகள் உள்ளன.
About the Author
R Balaji