டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதுமுதலே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினசரி ஒவ்வொரு புகார்களை கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இநத நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லியில் அதிகரித்து காற்று மாசுபாட்டை […]