வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
தேர்தல் ‘: உங்கள் பார்வை என்ன? படித்தவுடன் மனசு 36 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றது…
வாக்காளர்கள்…
வாக்காளராக நம் கடமை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா???
அரசியல்வாதியின் சூதாட்டத்தில் பகடைக்காய் இல்லை .
நாட்டை விற்க போகிறோமா? இல்லை..
நாட்டை வியக்க வைக்க போகிறோமா?
விடை, வினா.. இரண்டும் வாக்காளர் கையில்.
வாக்கு உரிமையாக!
‘மான்டெஸ்க்யூ’என்ற அறிஞர் ‘சட்டங்களின் ஆன்மா ‘என்ற நூலில் தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்கள் என்று பெருமையாக குறிப்பிடுகிறார். உண்மை .
பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல் நம் கையில் உள்ள வாக்கு என்ற மாபெரும் ஆயுதத்தைக் கொண்டு சாதி, மதம், இனம் பாராமல் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டைக் கட்டமைக்க நாம் உறுதி மேற்கொள்வது அவசியம்.
நம் உரிமை , நம் ஓட்டு என்பதற்கிணங்க நாட்டையும், நம்மையும் ஆளக்கூடிய நபரை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளரான நமக்கு உண்டு. அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான நல்ல பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது என்பதும் உறுதி.

நம் சிந்தனை 5 ஆண்டு காலம் நம்மை ஆளப்போகும் அரசியல் ஆளுமையை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டியது அவசியம்.
பணம் செலவழித்தால் போதும் தேர்தலையும், வாக்காளர்களையும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலையும், செலவழித்த பணத்தை திரும்பப் பெற பல மடங்கு ஊழல் என்ற நிலையும் இங்கு சர்வசாதரணமாக உள்ளது.
1500 ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தல் துறைக்கு முன்னோடியாக இருந்த உத்திரமேரூர் கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா?
போட்டியிடுபவருக்குரிய தகுதிகள் தேர்தல் விதிமுறைகளை மிகச்சரியாக பயன்படுத்துபவரை தேர்ந்தெடுப்பதே சரி என்று கூறுகிறது. உண்மையான ஜனநாயகத்திற்கு ஓட்டு போடுதல் அவசியம்.
வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது.
நாடு முழுக்க பாட்டாளி மக்கள் பரந்துபட்டு இருக்கின்றனர். இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அவர்களுக்கான வாக்கு உரிமையை அறவழியில் பதிவிட்டு, தனி மனித உரிமைகளுக்கும், தரமான செயல் முறைகளுக்கும், வழிவகை செய்து எவர் ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கிறாரோ,அவரை தேர்ந்தெடுப்பது மிகவும் சாலச்சிறந்தது.
அப்பொழுதுதான் எதிர்கால இந்தியா ஏற்றம் பெறும். வாக்களிப்பவர்கள் மேற்கொள்ளும் ஒருவிரல் புரட்சியினால் வாய்மை வலிமை பெறும். வாக்குரிமை மதிக்க பெறும்.

வேட்பாளர்களின் வாய் வாக்குகளும் நிஜமாகும்.
ஊழலுக்கு கைகொடுக்காமல், கும்பிட்டு வாழாமல்
நமது உரிமை காப்போம்.
சிந்தித்து வாக்களிப்போம். யார் வந்தால் நாடு செழிக்கும் என்பதை யோசித்து நம் வாக்குகளை செலுத்துவோம்
வாக்குரிமையை தவறவிட்டால் வாழ்வுரிமை தவற நேரிடும்.
தயவுசெய்து தேர்தல் நாளன்று வீட்டில் உட்கார்ந்து தூங்கிப் பொழுதைக் கழிக்காமல் உங்களது உரிமையை கடமையை செய்து வா( பா)ருங்கள்…
மனதிற்கு மகிழ்ச்சி வரும்.. எதையோ சாதித்தது போல் ஒரு பெருமிதமும் உடன் வரும்…
அது மட்டுமல்ல உங்களுக்கே உங்களுக்கென்று இசைஞானி தன் ஹார்மோனியத்தால் இசையமைத்து பாடல்பாட அது உங்கள் காதுகளில் ரீங்காரமிடும் உங்களைத் தாலாட்டும்.
‘ஒற்றை விரல் நீலமையால்’
நம் உரிமையை மீட்டு எடுப்போம்.
வாக்காளராக தமது பங்களிப்பை
100% செயலாற்றுவோம்..
36 வருடங்களுக்கு முன்பு.. ‘தேர்தல்’ என்ற தலைப்பில் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசி முதல் பரிசு வாங்கியது நினைவுக்கு வருகிறது.. (வந்தது) கூடவே 1989 ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக வாக்களித்ததும் நினைவுக்கு வருகிறது!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்
