திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 887 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 ஆயிரத்து 561 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 79 லட்சம் கிடைத்தது.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 11 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் (டைம் ஸ்லாட்) குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு 8 மணிநேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :