பிரஷித் கிருஷ்ணாவை விட முகமது ஷமி மோசமான பவுலரா? இந்திய அணியில் நடப்பது என்ன?

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில், அத்தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வொயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு அணிகளும் தலா 1- 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்களிலும் இரண்டாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அண்ணியும் வெற்றியடைந்தன.

Add Zee News as a Preferred Source

IND vs SA 2nd ODI: மோசமான பந்து வீச்சு

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 359 ரன்களை அடித்திருந்தந்து, விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சதம் விளாசி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், 360 ரன்கள் இலக்கை நோக்கி பயணித்த தென்னாப்பிரிக்கா அணி 4 பந்துகள் மீதம் வைத்து ஜெயித்தது. அந்த அளவிற்கு இந்திய அணியின் பந்துவீச்சானது மோசமாக இருந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களான பிரஷித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் மிகவும் மோசமாக பந்து வீச்சினர். அதிலும் பிரஷித் கிருஷ்ணா 8.2 ஓவர்கள் வீசி 10 எகானமியில் 85 ரன்களை வாரி வழங்கினார். இதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

Harbhajan Singh on Mohammed Shami: முகமது ஷமி மோசமான பவுலரா?

இந்த நிலையில், பிரஷித் கிருஷ்ணாவை விட முகமது ஷமி மோசமான பந்து வீச்சாளரா என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பி உள்ளார். 2023 உலகக்கோப்பை போட்டியில் காயத்துடன் சிறப்பாக பந்து வீசித் இந்தியாவை இறுதிப் சுற்று வரை கொண்டு செல்ல ஷமி முக்கிய காரணம் ஆவார். அதன் பின்னர் அறுவைசிகிச்சை முடித்து, 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆடி 8 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா அந்த பரிசை வெல்ல பங்காற்றினார்.

Jasprit Bumrah: பும்ரா இல்லை என்றால் சிரமம்:

ஆனால் அதனிடையே ஷமி முழுநேரமாக சுகாதார பராமரிப்பில் இல்லை என்று தெரிவித்து தேர்வுக்குழு அவரை போட்டியிலிருந்து தவிர்த்துள்ளது. இப்படித்தான், ரஞ்சிக் கோப்பை மற்றும் சயீத் முஸ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசித் தன்னுடைய உடல் நிலை மற்றும் திறனை வெளிப்படுத்தினும், இதனால் அவரை விலக்கி வருவதாக ஹர்பஜன் அரசு கடுமையாக விமர்சனம் செய்தார். “ஷமி எங்கே? அவர் ஏன் இவ்வளவு நேரம் விளையாடவில்லை எனக்கு புரியவில்லை” என்று அவர் சொன்னார்.

Mohammed Shami vs Prasidh Krishna: பிரசித் கிருஷ்ணா இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்

“பிரசித் ஒரு திறமையான பவுலர் என்றாலும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. நாம் நல்ல பவுலர்களை மெதுவாக வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். நமது பவுலிங் பும்ரா இருந்தால் அது ஒரு விதமாக இருக்கும், இல்லையென்றால் வேறு வடிவமாக இருக்கும். பும்ரா இல்லாமல் வெற்றிபெறுவதற்கான கலைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கிலாந்து சுற்று பயணத்தில் பும்ரா இல்லாமலும் சிராஜின் நம்பமுடியாத ஆட்டத்தால் டெஸ்ட் லும் அப்படி ஒரு கலவை நம்மக்கு தேவை” என்று அவர் தெரிவித்தார்.

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.