உலகின் பிரசத்தி பெற்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான டூகாட்டி மற்றும் டைட்டன் இணைந்து இந்தியாவில் 42 புதிய கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் டூகாட்டி பைக்கை வாங்கும் ஆர்வமாக உள்ளவர்களுக்கான முயற்சியாக வாட்ச் வாங்குவதற்கான அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது.
ரேசிங் ஆர்வலர்கள் மற்றும் வாட்ச் பிரியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாட்ச் கலெக்ஷன் பற்றிய விரிவான விபரம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன், டைடன் வோர்ல்டு, ஹீலியஸ் உட்பட முன்னணி டைட்டன் டீலர்களிடம் நாடு முழுவதும் கிடைக்க துவங்கியுள்ள நிலையில் விலை ரூ.14,729 முதல் அதிகபட்சமாக ரூ.27,999 வரை விற்பனை செய்யப்படுகின்றது.
டூகாட்டில் பைக்குகளில் உள்ளதை போன்ற ஸ்பீடோமீட்டர் போன்ற டயல்கள், சிவப்பு நிற ஹைலைட்ஸ் மற்றும் ஏரோடைனமிக் வடிவமைப்பு ஆகியவற்றுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக்கின் உணர்வைத் தரும் டெக்ஸ்சர்கள் மற்றும் டுகாட்டியின் தனித்துவமான ஸ்டைல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.