Sanjay Govil Eyes RCB Franchise Ownership: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru – RCB) அணி கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, $2 பில்லியன் மதிப்புள்ள இந்த அணியை வாங்கப்போகுபவர்கள் மீது அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. ஆர்சிபி (RCB) அணியை வாங்கப்போவது யார்?, ஆர்சிபி (RCB) அணி விற்பனைக்கு காரணம் என்ன?, ஆர்சிபி (RCB) அணி வரலாறு போன்ற விவரங்களை பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source
ஆர்சிபி (RCB) அணி உரிமையாளர்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 17 ஆண்டுகால டைட்டில் காத்திருப்புக்கு முடிவுக்குக் கொண்டு வந்த RCB அணி, IPL 2026 மற்றும் WPL 2026 சீசனுக்கு முன்பாக புதிய உரிமையாளரைப் பெற உள்ளது. ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான அணியின் உரிமையாளரான டியாஜியோ (Diageo) நிறுவனம் ஆர்சிபி (RCB) அணியை விற்பனையை மார்ச் 2026-க்குள் முடிக்க தற்காலிக காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
சஞ்சய் கோவில் யார்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வாங்கும் போட்டியில் திடீரென முன்னிலை வகிக்கிறார். RCB தனது புதிய உரிமையாளரைத் தேடத் தொடங்கியுள்ள நிலையில், அவரது பெயர் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியின் பொறுப்பை ஏற்கக்கூடிய வலிமையான போட்டியாளர்களில் ஒருவராகக் கருதுகின்றனர். அவர் தான் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் பின்னணியில் உள்ள இந்திய அமெரிக்க தொழில்முனைவோரான சஞ்சய் கோவில் ஆவார்.
சஞ்சய் கோவிலும் (Sanjay Govil) அவரது கிரிக்கெட் பின்னணியும்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வாங்குபவர்களின் பட்டியலில் அடிபடும் பல பெயர்களில் ஒன்று இந்திய-அமெரிக்க தொழிலதிபர் சஞ்சய் கோவில் என்று ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகை அறிக்கை கூறுகிறது.
பின்னணி: இவர் ஒரு தொழில்நுட்ப பில்லியனர். 1999 இல் தொடங்கப்பட்ட இன்ஃபினைட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் (Infinite Computer Solutions) என்ற உலகளாவிய தொழில்நுட்ப தள வழங்குநர் மற்றும் டிஜிட்டல் இன்ஜினியரிங் மற்றும் IT சேவைகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.
மற்றொரு நிறுவனம்: இவர் ஸைடர் (Zyter) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். இது டிஜிட்டல் சுகாதார தயாரிப்புகளில் கவனம் செலுத்தும் ஒரு cPaaS-அடிப்படையிலான தளமாகும்.
கல்வி மற்றும் அனுபவம்: கோவில் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் (Auburn University) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றதாகவும், சிராக்கூஸ் பல்கலைக்கழகம் (Syracuse University) மற்றும் வார்ட்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (Wharton School of Business) ஆகியவற்றில் உயர் பட்டங்களைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அவர் இதற்கு முன்பு IBM மற்றும் வெரிசோன் (Verizon) போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
கிரிக்கெட்டில் சஞ்சய் கோவியலின் பங்களிப்பு
அவர் தற்போது மேஜர் லீக் கிரிக்கெட்டில் (Major League Cricket -MLC) வாஷிங்டன் ஃப்ரீடம் (Washington Freedom) கிரிக்கெட் அணியின் உரிமையாளராக உள்ளார்.
தி ஹன்ட்ரட் (The Hundred) போட்டியில் வெல்ஷ் ஃபயர் (Welsh Fire) கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளராகவும் (மற்றொரு உரிமையாளர் கிளாமோர்கன் கிரிக்கெட் கிளப்) இருக்கிறார். வெல்ஷ் ஃபயர் அணியில் 49% பங்குகளை £33 மில்லியனுக்கு அவர் வாங்கியுள்ளார்.
டியாஜியோவின் முடிவு மற்றும் காலக்கெடு
ஆர்சிபி விற்பனைக்கு காரணம்: பன்னாட்டு மதுபான நிறுவனமான டியாஜியோ, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) தாக்கல் செய்த சமீபத்திய அறிக்கையில், RCB இல் தனது முதலீட்டைப் பற்றிய ஒரு மூலோபாய மதிப்பாய்வை (strategic review) மேற்கொண்டுள்ளதாகவும், அதன் முக்கிய வணிகத்தில் கவனம் செலுத்துவதற்காக விளையாட்டு சொத்துக்களை விற்க விரும்புவதாகவும் கூறியுள்ளது.
ஆர்சிபி விற்பனை காலக்கெடு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி விற்பனை என்பது மார்ச் 2026-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வரலாறு
2008 இல் லீக் தொடங்கப்பட்டபோது, அப்போதைய யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (United Spirits Ltd) நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா, $111.6 மில்லியனைச் செலவழித்து RCB ஐ வாங்கியிருந்தார். கடனில் சிக்கியதால் மல்லையா 2016 இல் உரிமையை இழந்த பிறகு, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டியாஜியோ அதன் முழு உரிமையாளரானது.
ஆர்சிபி (RCB) அணியை வாங்கும் பட்டியலில் இருப்பவர்கள் யார் யார்?
RCB அணியை வாங்க சஞ்சய் கோவில் தவிர, நிகில் காமத், ரஞ்சன் பை, ஆதார் பூனாவாலா மற்றும் அதானி குழுமம் போன்ற பிற முக்கியப் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
About the Author

Shiva Murugesan
Shiva Murugesan
…Read More