ஸ்மார்ட்போன்களில் சாட்லைட் லொக்கேஷன் டிராக்கிங் (GPS) எப்போதும் இயங்கத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய யோசனையை மத்திய அரசுக்கு தொலைத்தொடர்புத் துறை வழங்கியுள்ளதாகவும் இதுகுறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலி மக்களை உளவு பார்க்கும் முயற்சி என்று கடந்த சில தினங்களுக்கு முன் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அதை கைவிடுவதாக அரசு அறிவித்திருந்தது. வழக்கு விசாரணை அல்லது சட்டபூர்வ கோரிக்கை வந்தால், தற்போது டெலிகாம் நிறுவனங்கள் செல் டவர் லொக்கேஷன் […]