மும்பை,
நேற்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டான் டி காக் (106 ரன்) 23-வது சதம் அடித்தார்.இதனால் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் அவர் இந்தியாவுக்கு எதிராக அடித்த 7-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவரான இலங்கை முன்னள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவின் (7 சதம், 85 இன்னிங்சில்) சாதனையை சமன் செய்தார்.
ஆனால் குயின்டான் 23 இன்னிங்சில் இந்த சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக சதம் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இலங்கையின் குமார் சங்கக்கராவுடன் (இவரும் 23 சதம்) பகிர்ந்து கொண்டார்.