இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட பரபரப்பான டி20 தொடர் இன்று தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு தயார்படுத்தும் விதமாக இந்த தொடர் அமைந்துள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெறவில்லை.
Add Zee News as a Preferred Source
இந்திய அணியின் சொதப்பல் பேட்டிங்
இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடியாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்து பவர் பிளே முடிவதற்குள் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. சும்மன் கில் 4 ரன்களுக்கும், சூரியகுமார் யாதவ் 12 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அதிகம் எதிர்பார்த்த அபிஷேக் சர்மா 17 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்பு நிதானமாக விளையாடினர் திலக் வர்மா மற்றும் அக்சர் படேல். இருப்பினும் இருவரும் 26 மற்றும் 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
ஹர்திக் பாண்டியாவின் அதிரடி
காயத்திற்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்த ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். வெறும் 28 பந்தில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் அடித்தார். இவரது அதிரடியின் காரணமாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்தது. தென்னாபிரிக்கா அணியின் தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கட்டுகளையும், சிபம்லா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 176 ரன்கள் அடித்தால் வெற்றியின் நிலையில் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது.
Hardik Pandya special in the T20I series opener!
How good was that finish from the #TeamIndia all-rounder?
Updates https://t.co/tiemfwcNPh #INDvSA | @hardikpandya7 | @IDFCFIRSTBank pic.twitter.com/6CC8ejk4eF
— BCCI (@BCCI) December 9, 2025
தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்
இந்த பிச்சில் சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியை போலவே அவர்களும் பவர் பிளே முடிவதற்குள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் ஆட்டமிழந்தினர். அக்சர் படேலின் துல்லியமான பந்தில் மார்க்கரம் 14 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர்,ஃபெரீரா, மார்கோ ஜான்சன் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து தடுமாறினர். நிதானமாக ஆடிய பிரவீஸ், பும்ரா பந்தில் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இறுதியில் 12.3 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாபிரிக்கா அணி. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 4 கேட்களை சிறப்பாக பிடித்தார். மேலும் பேட்டிங்கிலும் 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்து இருந்தார். இதனால் இனி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.
About the Author
RK Spark