மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.! | Automobile Tamilan

பெங்களூருவில் நடைபெற்று வரும் EXCON 2025 மாபெரும் கட்டுமானத் துறை சார்ந்த கண்காட்சியில் சிறிய ரக காம்பேக்டார் ஆனது தொழிற்சாலை வளாகங்கள், கிராமப்புற சாலைகள் அல்லது நகர்ப்புறங்களில் உள்ள குறுகிய சந்துகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற மஹிந்திரா நிறுவன காம்பேக்ஸ் என்ற பெயரில் சிறிய காம்பாக்டரை வெளியிட்டுள்ளது.

Compax அளவில் சிறியதாக இருப்பதால், நெரிசலான இடங்கள், நடைபாதைகள், மற்றும் குறுகிய தெருக்களில் மிக எளிதாகச் சென்று சாலை அமைக்கும் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ளஎன்ஜின், குறைந்த எரிபொருளில் நீண்ட நேரம் உழைக்கும் திறன் கொண்டது. மேலும், இதை இயக்குவதும் பராமரிப்பதும் மிகவும் எளிது என்பதால், சிறிய அளவிலான ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமானப் பொறியாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

மஹிந்திரா கட்டுமான உபகரண நிறுவனம் தற்போது அதன் பிரசத்தி பெற்ற ரோட்மாஸ்டர் மூலமாக மோட்டார் கிரேடர் பிரிவில் 18 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் எர்த்மாஸ்டர் பேக்ஹோ லோடர் மண் நகர்த்தும் பிரிவிலும் கிடைக்கின்றது.

இந்தியா முழுவதும் 136 டச் பாயிண்டுகளுடன் இதில் 51 3S டீலர்ஷிப்கள், 16 சாத்தி உடன் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள், 19 சாத்தி உடன் விற்பனை நிலையங்கள் மற்றும் 50 உதிரி பாகங்கள் விற்பனை நிலையங்கள் உள்ளன. MCE அதன் இயந்திரங்களுக்கு ஒரு வருட, 2,000 மணிநேர உத்தரவாதத்தை வழங்குகிறது.

mahindra compax compactor 1mahindra compax compactor 1

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.