அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.
அந்தவகையில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை நடத்திவருகிறார்.

இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று (டிச. 10) நடக்கிறது.
இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் தயாராகி வருகிறது. இதுதொடர்பான உணவுப் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதாவது அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை மசாலா, மீன் வறுவல், அல்வா, மட்டன், மட்டன் குழம்பு, சாதம், தால்சா போன்ற உணவுகளும் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சாதம், சாம்பார், ரசம், வடை, பாயாசம், காரக்குழம்பு, மோர், பொரியல் போன்றவைகளும் உணவு பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.




